26.3 C
Jaffna
February 26, 2024
இலங்கை

கெஹலிய இன்று நீதிமன்றத்தில்!

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலங்களைப் பதிவு செய்த அமைச்சரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (02) பிற்பகல் கைதுசெய்துள்ளனர்.

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் நேற்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு வழங்கிய உத்தரவின் பிரகாரம் அவர் வாக்குமூலமளிக்க வந்திருந்தார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதே இந்த உத்தரவும் தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலமொன்றை வழங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சரிடம் கூறப்பட்ட போதிலும் அவர் ஆஜராகாமல் பொய்யான தகவல்களை சமர்ப்பித்ததாக அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம அன்றைய தினம் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தார்.

கோரிக்கைக்கு அமைய மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம, அமைச்சருக்கு நேற்று (02) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தாய் உயிரிழந்த செய்தியை கேட்டதும் மகனின் உயிரும் பிரிந்தது!

Pagetamil

யாழ் மரதன்

Pagetamil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- சமத்துவ கட்சி தலைவர் சந்திரகுமார் சந்திப்பு

Pagetamil

மார்ச் மாதம் முதல் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினராகும் இலங்கையர்!

Pagetamil

‘நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை’: எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!