25.3 C
Jaffna
February 21, 2024
முக்கியச் செய்திகள்

இலங்கைக்கு இன்னிங்ஸ் வெற்றி கிட்டுமா?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரானன ஒற்றை டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவில், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 410 ஓட்டங்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. அஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமால் சதமடித்தனர்.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் ஆடிய ஆப்கான் அணி 198 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.

தொடர்ந்து, துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில்  6 விக்கெட்டுக்களை இழந்து 410 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

அஞ்சலோ மத்யூஸ் தனது 16வது டெஸ்ட் சதத்தையும், தினேஷ் சந்திமால் தனது 15வது டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்தனர்.

107 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சந்திமாலும் 141 ஓட்டங்கள் பெற்ற நிலையில் மத்யூஸூம் ஆட்டமிழந்தனர்.

திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களை பெற்றார். அணித்தலைவர் தனஞ்ஜய டி சில்வா ஓட்டம் பெறாமல் ரன் அவுட்டானார்.

ஆப்கானிஸ்தான் அணி  தரப்பில் கைஸ் அகமது, நவீத் சத்ரன் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்: பௌத்த பிக்குவும் பற்கேற்பு!

Pagetamil

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை: உயர்நீதிமன்றம்!

Pagetamil

அரசின் தனியார் மயமாக்கலால் மக்களின் வாழ்க்கை பெரும் அபாயத்தில்… புத்தரின் போதனையின் படி அரச தலைவரின் கடமை என்ன?: ரணிலுக்கு காட்டமான கடிதம் அனுப்பிய மகாநாயக்கர்கள்!

Pagetamil

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழப்பு!

Pagetamil

மன்னாரில் 9 வயது சிறுமி வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை?; அடையாளத்தை மறைத்து வாழ்ந்தாரா சந்தேகநபர்?: நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!