வவுனியா வைத்தியசாலையில் கம்பிநீட்டிய போதைப்பொருள் சந்தேகநபர்!

Date:

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் காலை தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி 26ஆம் திகதி நெளுக்குளம் பொலிஸாரினானால் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய இளைஞன் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் வவுனியா சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி இளைஞருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் காவலில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே 31ஆம் திகதி காலை 6 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் போராட்டங்களில் 3,117 பேர் பலி

டிசம்பர் மாத இறுதியில் வெடித்த போராட்டங்களின் போது 3,117 பேர் கொல்லப்பட்டதாகவு...

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம்...

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்