25.3 C
Jaffna
February 21, 2024
இலங்கை

போலி ஆவணங்கள் சமர்ப்பித்து 20 மாடுகளை கடத்திய கால்நடை வைத்தியர் கைது!

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கர்ப்பிணி பசுக்கள் உட்பட 20 மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் பதவியா பிரிவின் கால்நடை வைத்தியர் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டு பதவியா பொலிஸாரால் கெபித்திகொல்லாவ மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கால்நடை வைத்தியர் கே.எச்.எம்.பிரியந்த பாண்டுசிறி மற்றும் அவரது அலுவலக ஊழியர் டி.டி.பாலித ஆகியோர் தலா 500,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தலையிட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மூன்று சந்தேக நபர்கள் பெப்ரவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட கர்ப்பிணிப் பசுக்களைக் கொண்டு செல்வதற்கு சந்தேகத்திற்குரிய கால்நடை வைத்தியர் போலி ஆவணங்களை வழங்கியுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் கெபித்திகொல்லாவ விசேட குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு மாற்றப்படும் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

கரைச்சி பிரதேசசபைக்கு புதிய செயலாளர்

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்குகளில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக முடியாது; தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விளையாட்டு: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

Pagetamil

இராமநாதன் அரங்காற்றுகை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

யாழில் இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கடற்றொழிலாளர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!