நாட்டின் தேசிய வருமானத்தில் 64 வீதத்தை, வாழ்க்கைத்தரத்தில் உயர்மட்டத்திலுள்ள 10 வீதத்தினரும், கீழ்மட்டத்தில் உள்ள 50 வீதமானவர்கள் 4 வீதமான தேசிய வருமானத்தில் மிகச் சிறிய வீதத்தையே அனுபவிக்கின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் எம்.பி விமல் வீரவன்ச ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார். .
நாட்டின் வரிக் கொள்கையானது மேற்குறிப்பிட்ட பாரதூரமான ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி சிந்திக்காமல் மறைமுக வரிகளை விதிப்பதன் மூலம், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினர் தேசிய வருமானத்தில் 4 சதவீதத்தை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் உண்மை நிலையை சரியாகக் கருத்திற் கொள்ளாமல் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதாகவும், அரசாங்கம் நடந்துகொள்ளும் விதம் பற்றிய புரிதல் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
புறக்கோட்டையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.