27.5 C
Jaffna
February 21, 2024
இலங்கை

கிளிநொச்சியில் கட்டுத்துவக்கு வெடித்து பொலிஸ்காரர் காயம்!

கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, இன்று அந்த பகுதியை சுற்றிவளைத்து ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.

பொலிசார் அவரை விரட்டிச் சென்றுள்ளனர்.

அப்பொழுது, மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்தார்.

37 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கேக் லேடி மீது மொட்டு உறுப்பினர் முறைப்பாடு!

Pagetamil

இரணைமடுகுளத்தையும் வயல் நிலங்களையும் சட்டவிரோத மணல் அகழ்வோரிடமிருந்து காப்பாற்றுங்கள் – பிரதேச மக்கள் அவசர கோரிக்கை

Pagetamil

யாழில் துயரம்: நாய் குறுக்காக ஓடியதால் யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி!

Pagetamil

யாழில் பூட்டிய வீட்டுக்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவியும், 17 வயது மாணவனும்!

Pagetamil

லொறி மோதி உயிரிழந்த பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!