அளுத்கம, வெலிப்பன்ன பிரதேசத்திலுள்ள விகாராதிபதியொருவர் சிவில் உடையில் 3 இளம் யுவதிகளுடன் தேரர் லுணுகம்வெஹர மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களுக்கு உல்லாசமாக சுற்றுலா சென்ற போது பொதுமக்களல் பிடிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் தங்கியிருந்த விகாரையில் பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விகாராதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அளுத்கம வெலிபன்ன தெற்கு அதிவேக நெடுஞ்சாலைஈ வெலிப்பன்ன பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள விகாராதிபதி சிவில் உடை அணிந்து மூன்று இளம் யுவதிகளுடன் கதிர்காமம் லுனுகம் வெஹெர திஸ்ஸமஹாராம பிரதேசத்திற்கு உல்லாச சுற்றுலா சென்றுள்ளார்.
அதே நாளில், மேற்கூறிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற, வெலிப்பன்ன பகுதி இளைஞர்கள் குழுவொன்று, 3 யுவதிகளுடன் பிக்கு “ஆன்மீக சுற்றுலா“ செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்து, அவர்களை வீடியோ எடுத்தனர். அதை முகநுல்களிலும் பதிவிட்டனர்.
உல்லாச பயணத்தை முடித்துக் கொண்டு பிக்கு விகாரைக்கு திரும்பிய போது, கடந்த 29ஆம் திகதி இரவு விகாரை முன்றலில் பெருமளவான மக்கள் திரண்டு பிக்குவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர் விகாரையை விட்டு வெளியேறினார்.