26.2 C
Jaffna
February 22, 2024
இலங்கை

மஹிந்த, சுமதிபால பதவிவிலகினர்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகிய இருவரும் இன்று (01) இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய இந்த இராஜினாமா கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செயற்படும் போதே அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாகக் கூறி மஹிந்த அமரவீரவை செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்சி அங்கீகாரமளித்துள்ளது.

அமரவீர நீக்கப்பட்டு வெற்றிடமாக இருந்த செயலாளர் பதவிக்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டார்.

இந்த தீர்மானத்திற்கு எதிராக மகிந்த அமரவீர சட்ட நடவடிக்கை எடுத்ததுடன், இரு பொதுச் செயலாளர்களையும் ஏற்க மாட்டோம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாத சிக்கல் ஏற்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பல கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைப்பதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதுடன், அதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட போதிலும், இந்தச் செயலாளர் பிரச்சினையால் அது தடைப்பட்டது.

நிலைமையை சுமுகமாக்குவதற்காக அமரவீர மற்றும் சுமதிபால ஆகிய இருவரையும் தமது பதவிகளில் இருந்து விலகுமாறு கட்சி தலைமை அறிவித்ததாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உட்கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பல்கலைக்கழக மாணவன் மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்: கூலிப்படை தாக்குதல் முயற்சியா?

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.ஆர் காலமானார்!

Pagetamil

புது திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும் போதே யாழ் பல்கலை மாணவன் விபத்தில் இறந்தார்… ஒரு தலை காதல் காரணமா?; அதிர வைக்கும் சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விவகாரத்தில் திடீர் திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும்போதே விபத்து!

Pagetamil

காதலர் தினத்தன்று மனைவிக்கு பரிசளிக்க நகை திருடிய இளைஞன் கைது: யாழில் சம்பவம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!