27.9 C
Jaffna
December 10, 2024
Pagetamil
சினிமா சின்னத்திரை

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு இரகசியமாக அழைத்த நடிகை!

பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. பிறகு பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்திலே, ஜெயம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அரண்மனைக்கிளி, வம்சம் உள்ளிட்ட நெடுந்தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இந்தச் சூழலில் தன்னை ஒரு சீனியர் காமெடி நடிகர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று பல காலமாக உண்டு. அதனை உறுதிப்படுத்தும்படிதான் சினிமாவில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் ஆண்களாக இருக்கிறார். பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர் எல்லாம் ரொம்பவே கம்மிதான். நடிப்பில் பெண்கள் அதிக அளவு இருந்தாலும் அவர்களுக்கு உருவாக்கப்படும் பிரச்னை மற்ற பெண்களை திரைத்துறைக்குள் வருவதற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அப்படி உள்ள பிரச்னைகளில் தலையாய பிரச்னைதான் அட்ஜெஸ்ட்மெண்ட்.

சினிமாவில் அறிமுகமாக வேண்டுமா, தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமா அதற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சிலர் ஓபனாகவும், மறைமுகமாகவும் நடிகைகளிடம் அப்ரோச் செய்யும் வழக்கம் காலங்காலமாக இருந்துவருகிறது. பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இந்தக் காலத்திலும் அந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் ஓய்ந்தபாடில்லை என்பதுதான் கள யதார்த்தம்.

சில வருடங்களுக்கு முன்னர் எல்லாம் தங்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்தால் சைலெண்ட்டாக மறுத்துவிட்டு அதனை பொதுவெளியில் சொல்லாமல் இருந்தார்கள் நடிகைகள். இப்போது பலரும் அதுகுறித்து வெளிப்படையாக பேசிவருகிறார்கள். அது ஆரோக்கியமான விஷயமான ஒன்றகாவே பார்க்கப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன், நடிகை வரலட்சுமி உள்ளிட்டோரும் தங்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்ததாக ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் சினிமாவில் அறிமுகமாகி பிறகு சீரியலில் நடித்துவரும் நடிகை பிரகதியும் தன்னை ஒரு சீனியர் காமெடி நடிகர் படுக்கைக்கு அழைத்ததாக கூறிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், “ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காலையில் நடந்த சம்பவம் இது. சீனியர் காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக என்னிடம் அப்போது தவறாக நடந்துகொண்டார். அதுமட்டுமின்றி மறைமுகமாக படுக்கைக்கும் என்னை அழைத்தார்.

அப்படி என்னை அழைத்த அவரை பல பேர் முன்னிலையில் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. அன்றைய ஷூட்டிங் முடியும்வரை பொறுமையாக இருந்தேன். பிறகு அவரை எனது கேரவனுக்கு வரவழைத்து பேசினேன். அப்போது அவரிடம், ‘நீங்கள் என்னிடம் தவறாக நடந்துகொள்ளலாம் என்று நான் எதுவும் உங்களுக்கு சிக்னல் கொடுத்தேனா’ என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று சொன்னார்.

சரி எனது உடல் மொழி எதுவும் உங்களுக்கு அப்படி தோன்ற வைத்ததா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்று சொன்னார். உடனே நான், நீங்கள் நடந்துகொண்ட விதம் ரொம்பவே தவறானது. ரொம்பவும் கீழ்த்தரமான செயல். நீங்கள் என்னிடம் கேட்ட அந்த இடத்திலேயே உங்களை அசிங்கப்படுத்தி அனுப்பியிருக்க முடியும். ஆனால் உங்களது இமேஜ் உடைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்துவிட்டு இப்போது தனியாக அழைத்து சொல்கிறேன் என்று எச்சரித்து அனுப்பினேன்” என்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரகதி கூறிய அந்த சீனியர் காமெடி நடிகர் யாராக இருப்பார் என்று வலைவீசி தேடிவருகின்றனர். அவர்களில் சிலர், பிரகதி சினிமாவில் நடித்த காலத்தில் இருந்த காமெடி நடிகர்களை எல்லாம் இந்த விவாகரத்துக்குள் இழுத்து பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை!

Pagetamil

குருவாயூர் கோயிலில் நடைபெற்ற காளிதாஸ் ஜெயராம் – தாரிணி திருமணம்!

Pagetamil

புஷ்பா 2 Review: பாதியில் அணைந்து போன ‘ஃபயர்’!

Pagetamil

போதை பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது

Pagetamil

சின்னத்திரை நடிகர் நேத்ரன் மறைவு

Pagetamil

Leave a Comment