24.9 C
Jaffna
February 21, 2024
இலங்கை

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

அத்துடன், பாராளுமன்றத்தில் விவாதித்து திருத்தங்களுடன் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தேசிய நீரளவை சட்டமூலம் மற்றும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் ஆகியவற்றிலும் சபாநாயகர் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க தேசிய நீரளவை சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் பூட்டிய வீட்டுக்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவியும், 17 வயது மாணவனும்!

Pagetamil

லொறி மோதி உயிரிழந்த பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர்!

Pagetamil

முன்னர் குறிப்பிட்டதை விட அதிகமாக மின் கட்டணம் குறையுமாம்!

Pagetamil

சுமந்திரனின் மனுவை நிராகரியுங்கள்: உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்!

Pagetamil

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!