26.3 C
Jaffna
February 26, 2024
இலங்கை

தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் 11 அல்லது 12ஆம் திகதி!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாக தெரிவில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலைமையில், மத்தியகுழு கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 11 அல்லது 12ஆம் திகதி வவுனியாவில் மத்தியகுழு கூட்டம் நடைபெறும்.

இதன்போது, குழப்பத்தில் உள்ள நிர்வாகத்துக்கு மாற்றாக புதிய நிர்வாக தெரிவு யோசனை சமர்ப்பிக்கப்படும் என விடயமறிந்த வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.

எனினும், புதிய நிர்வாக தெரிவை சுமந்திரன் தரப்பினர் எதிர்ப்பார்கள் என்பதால், அன்றைய தினமும் கொந்தளிப்பான நிலைமையேற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 27ஆம் திகதி வவுனியாவில் கூடிய போது, கடும் கொந்தளிப்பான நிலைமையேற்பட்டது. காலையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சர்ச்சையேற்பட்டதை தொடர்ந்து, மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், பொ.கனகசபாபதி, குலநாயகம் ஆகியோர் கூடி செயலாளராக குகதாசனையும், ஏனைய நிர்வாகிகளின் பெயர்களையும் பரிந்துரைத்தனர்.

பின்னர் மத்தியகுழுவில் செயலாளரின் பெயர் மாத்திரம் பரிந்துரைக்கப்பட்டது. பொதுக்குழு அவரை ஏற்றுக்கொண்டால், செயலாளராக நியமிக்கலாமென மத்தியகுழு தீர்மானித்தது.

பொதுக்குழுவில் குகதாசனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த இழுபறி நீண்டநேரம் நீடித்ததால், செயலாளருக்கான வாக்கெடுப்பை நாளை நடத்துவதென தலைவர் மாவை அறிவித்தார்.

இந்த குழப்பங்களுக்கு இடையே, உப செயலாளர் என்ற அடிப்படையில், செயலாளராக குகதாசனை நியமிக்கும் தீர்மானத்தை அங்கீகரிக்கிறார்களா என சுமந்திரன் வாக்கெடுப்பை நடத்தினார். இதில் சிலர் இரண்டு கைகளையும் உயர்த்தினர். வாக்களிக்க தகுதியற்ற பலரும் வாக்களித்தனர். பிரித்தானியாவிலிருந்து வந்திருந்த ஒருவரும் வாக்களித்தார். குகதாசனால் அழைத்து வரப்பட்ட தொண்டர்கள், வாகன சாரதிகளும் வாக்களித்தனர். அவர்களின் ஆதரவுடன் குகதாசனுக்கு ஆதரவாக 112 வாக்குகளும், எதிராக 104 வாக்குகளும் பதிவாகின.

இது முறையற்ற தேர்தல் என குறிப்பிட்டு, அந்த தெரிவையும், தேசிய மாநாட்டையும் ஒத்திவைப்பதாக மாவை சேனாதிராசா அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, மாவை சேனாதிராசா வீட்டுக்கு எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் சென்று பேச்சு நடத்தினர். இதன்போது, கட்சியின் யாப்பையும் சுமந்திரன் எடுத்து சென்றார்.

சுமந்திரனையும் அரவணைத்தே கட்சியை முன்னகர்த்த எண்ணியிருந்ததாகவும், சுமந்திரன் இப்படி செயற்படுவது மனவருத்தமளிப்பதாகவும் மாவை குறிப்பிட்டார்.

கட்சியின் யாப்பின் அடிப்படையிலேயே செயற்பட்டுள்ளதாகவும், யாப்பின் அடிப்படையில் செயற்பட்டு தெரிவு செய்யப்பட்ட குழுவை அங்கீகரித்து, தேசிய மாநாட்டை நடத்துமாறு சுமந்திரன் கேட்டுக் கொண்டார்.

யாப்பின் அடிப்படையில் செயற்படுவதெனில் நாங்கள் தயார். நீங்கள் யாப்பின் அடிப்படையில் கிளை தெரிவு நடத்தவில்லை. அந்த விபரங்கள் எல்லாம் எம்மிடம் உள்ளன. நீதிமன்றத்திற்கு சென்றாலும், நீங்கள் இதில் வெற்றிபெற முடியாது என மாவை சேனாதிராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமந்திரன் தரப்பிற்கு ஆதரவாக தெரிவு செய்யப்பட்ட கிளை குழுக்களில் பல குழறுபடிகள் உள்ளன, மேலோட்டமான ஆய்வின்படியே 25 வரையான தகுதியற்ற கிளைக்கிளை உறுப்பினர்களை எம்மால் அடையாளம் காட்ட முடியமென மாவை தரப்பு ஏற்கெனவே சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுக்குழுவின் ஒரு கட்டத்தில் சுமந்திரன் எகிற, இந்த அஸ்திரத்தை பாவித்தே அவரை மாவை தரப்பு கட்டுப்படுத்தியது.

மாவையின் வீட்டிலும் இதே அஸ்திரத்தை பாவித்தே கட்டுப்படுத்தியுள்ளனர்.

மத்தியகுழுவில் இந்த விவகாரங்களை ஆராய்ந்து, புதிய தெரிவுக்கான பரிந்துரையை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், கிழக்கு மாகாணத்திற்கு சென்று அங்குள்ளவர்களுடன் சிறிதரன் கலந்துரையாடுவதென்றும், திருகோணமலைக்கு சென்று குகதாசனை கலந்துரையாடுமாறும் கூறப்பட்டது. என்றாலும், தனக்கு நேரமில்லையென்றும், நீங்களே சென்று அவருடன் கலந்துரையாடுங்கள் என சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த பின்னணியில் மத்தியகுழு, பொதுக்குழு கூட்டங்களுக்கு எதிராக சுமந்திரன் நீதிமன்றத்தை நாடும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

என்றாலும், தலைவர் தெரிவுக்கு எதிராக- சுமந்திரன் அணியில் செயற்படும் முல்லைத்தீவு முஸ்லிம் சுயேச்சைக்குழு சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த பீற்றர் இளஞ்செழியன் சார்பில் வழக்கு தொடர முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் மரதன்

Pagetamil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- சமத்துவ கட்சி தலைவர் சந்திரகுமார் சந்திப்பு

Pagetamil

மார்ச் மாதம் முதல் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினராகும் இலங்கையர்!

Pagetamil

‘நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை’: எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Pagetamil

கொள்கலனில் மறைந்து வெளிநாடு செல்ல முயன்ற 2 தமிழர்களும் நாடு கடத்தப்பட்டனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!