26.3 C
Jaffna
February 26, 2024
உலகம்

உக்ரைன் தலைமை தளபதியை பதவிநீக்கும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி?

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனிய தலைமை தளபதி வலேரி ஜலுஷ்னியை பதவி நீக்கம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இரு தலைவர்களுக்கும் இடையே பிளவு ஏற்படக்கூடும் என்று பல வாரங்களாக ஊகிக்கப்பட்ட நிலையில், பதவிநிக்கப்படலாம் என்ற செய்தியை ஜனவரி 31 அன்று பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டது.

அறிக்கைகளின்படி, ஜனவரி 30 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஜலுஷ்னி அழைக்கப்பட்டு, அவர் நீக்கப்படுவதாகக் குறிப்பிடப்ட்டுள்ளது.

அதிகாரபூர்வ ஜனாதிபதி ஆணை எதுவும் வெளியிடப்படவில்லை. ஜனவரி 31 வரை ஜலுஷ்னி இன்னும் அதிகாரப்பூர்வமாக பதவியில் இருந்தார். CNN அவரது பணிநீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வார இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கிறது.

ஜலுஷ்னி ஜூலை 2021 முதல் தலைமை தளபதியாக பணியாற்றினார். நவம்பர் 2023 இல் ஜெலென்ஸ்கி மற்றும் ஜலுஷ்னி இடையே கருத்து வேறுபாடுகள் பற்றிய அறிக்கைகள் முதலில் வெளிவந்தன.

நவம்பர் 1 அன்று தி எகனாமிஸ்ட் பத்திரிகைக்கு போர் நிலவரம் குறித்து ஜலுஷ்னிஅளித்த பேட்டியைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கூறப்படும் கருத்து வேறுபாடு அதிக கவனத்தைப் பெற்றது, அதில் உக்ரைன் நீடித்த போரின் பொறிக்குள் செல்லும் அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.

நவம்பர் 4 அன்று நடந்த மாநாட்டின் போது இந்த உணர்வுடன் உடன்படவில்லை என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சில இராணுவத் தளபதிகளுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டு பேசுகிறார், ஜலுஷ்னியை “புறக்கணிக்கிறார்” என்று அநாமதேய ஆதாரங்களை மேற்கோள் காட்டி உக்ரைனிய ஊடகங்கள் கடந்த மாத நடுப்பகுதியில் கூறியிருந்தன.

இராணுவ, விமானப்படை தளபதிகளுடன் நேரடியாக பேசி கட்டளைகள் வழங்குகிறார், ஜலுஷ்னிக்கு தெரியாமல் பல நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டிருந்தன.

ஜனாதிபதி ஜெலென்ஸ்கி டிசம்பர் 19 அன்று செய்தியாளர் சந்திப்பின் போது, தளபதி ஜெனரல் ஜலுஷ்னி உடன் “பணிபுரியும் உறவு” இருப்பதாகக் கூறினார்.

தலைமை தளபதியின் நீக்கத்தின் பின்னணியில் 2 காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரஷ்ய படைகள் மீது பெரும் பிரச்சாரத்துடன் உக்ரைன் ஆரம்பித்த எதிர்தாக்குதல் தோல்வியுற்றது. ஜெலென்ஸ்கியின் ஜனாதிபதி பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இராணுவச் சட்டம் காரணமாக தேர்தல்கள் தொழில்நுட்ப ரீதியாக ஒத்திவைக்கப்பட்டாலும், அவற்றின் சாத்தியம் குறைவாகவே உள்ளது.

ஜெலென்ஸ்கி மற்றும் ஜலுஷ்னி இடையே உள்ள முரண்பாடு, வரவிருக்கும் ஆண்டின் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கிறது மற்றும் நாட்டின் ஒற்றுமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. தற்போதைய நிலைமையில் ஜெலன்ஸ்கிக்கு சாத்தியமான எதிர்போட்டியாளர் இல்லாத நிலையில், ஜலுஷ்னிக்கு பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஹீரோ இமேஜ், தனது அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்தாக அமையும் என அஞ்சுவதால் பதவிநீக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது!

Pagetamil

நிலவில் வெற்றிகரமான தரையிறங்கிய தனியார் நிறுவன விண்கலம்

Pagetamil

இஸ்ரேலின் இனஅழிப்புக்கு அமெரிக்கா பச்சை விளக்கா?: போர்நிறுத்த தீர்மானத்தை வீட்டோ செய்தது!

Pagetamil

அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சிக்காக 200 ஏக்கரில் 30 ஆயிரம் குரங்குகளுக்கு மினி நகரம்

Pagetamil

பிரபல நீலப்பட நடிகை தற்கொலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!