27.5 C
Jaffna
February 21, 2024
இலங்கை

மானிப்பாயில் போதைப்பொருள் கும்பலுக்குள் ஊடுருவிய பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய 4 பேர் கைது!

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய 4 பேர் மானிப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

கூழாவடி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையொன்றுக்காக சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரே தாக்கப்பட்டார்.

போதைப்பொருள் கும்பலுக்குள் ஊடுருவி தகவல் பெற்றுக்கொண்டு வரும் சமயத்தில், அவரை பொலிஸ் உத்தியோகத்தர் என இனம்கண்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அவரது மோட்டார் சைக்கிள் திறப்பு, தலைக்கவசம், மின்விளக்கு என்பவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேரையும் மானிப்பாய் பொலிசார் இன்று அதிகாலைக்குள் கைது செய்தனர். சவற்காடு பகுதியை சேர்ந்தவர்களே கைதாகினர். கைதாகியவர்களில் ஒருவரின் வயது 18.

தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் பூட்டிய வீட்டுக்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவியும், 17 வயது மாணவனும்!

Pagetamil

லொறி மோதி உயிரிழந்த பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர்!

Pagetamil

முன்னர் குறிப்பிட்டதை விட அதிகமாக மின் கட்டணம் குறையுமாம்!

Pagetamil

சுமந்திரனின் மனுவை நிராகரியுங்கள்: உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்!

Pagetamil

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!