25.3 C
Jaffna
February 21, 2024
இலங்கை

தகன மேடையில் பாதி எரிந்த சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார்!

பாதி தகனம் செய்யப்பட்ட ஒரு சடலம் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வேயங்கொட பகுதியைச் சேர்ந்த ஆர்.டி.சிறிசோம ரணசிங்க (81) என்ற பெண் மீரிகமவில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர். நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து, உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

அவர் நோய்வாய்ப்பட்டு மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களின் தீர்மானத்திற்கு அமைய அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், அவரது மரணம் குறித்த தகவல்களுக்கு அவரது பாதுகாவலர் எந்த பதிலும் தெரிவிக்காததால், முதியோர் இல்லம் மீரிகம சுடுகாட்டில் சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையில், அந்தப் பெண்ணின் மரணத்திற்கு துஷ்பிரயோகம் நடந்ததும் காரணமென சந்தேகிக்ப்பதாக உறவினர் ஒருவர் கம்பஹா பிரிவு பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, மீரிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். திடீர் மரண விசாரணையாளர் துசித பிரமோத் விஜேயவர்தனவுடன் பொலிஸ் குழுவொன்று சுடுகாட்டிற்கு வரவழைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்ட சடலத்தை அகற்றி பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

கரைச்சி பிரதேசசபைக்கு புதிய செயலாளர்

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்குகளில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக முடியாது; தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விளையாட்டு: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

Pagetamil

இராமநாதன் அரங்காற்றுகை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

யாழில் இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கடற்றொழிலாளர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!