25.3 C
Jaffna
February 21, 2024
இலங்கை

சுதந்திரக்கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் சந்திரிக்கா!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஒருவர் நேற்று (26) தெரிவித்தார்.

பதவியை ஏற்க சந்திரிக்கா விருப்பம் தெரிவித்து்ளளதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பல கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய கூட்டணியின் தலைமைக்கு தனியாக முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படாது, சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் கூட்டணியில் இணையும் ஏனைய கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய தலைமைத்துவ சபையொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 50 வீத பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும், அதனுடன் இணையும் ஏனைய கட்சிகளுக்கு 50 வீத அதிகாரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணிக்கு வெற்றிலை சின்னம் அல்லது நாற்காலி சின்னம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், அது குறித்து விவாதித்து முடிவெடுக்க தயாராக இருப்பதாகவும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டமைப்பு தனது முதலாவது சந்திப்பின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனதா விமுக்தி பெரமுனவின் பழைய சித்தாந்தம் கொண்ட பல குழுக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன் புதிய கூட்டணியின் முக்கிய கூட்டத்தை கொழும்பில் நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் திலங்க சுமதிபால மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் இன்னும் உறுதியான இணக்கப்பாட்டுக்கு வரவில்லை எனவும், உடனடியாக முடிவெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருவருக்கும் அறிவித்துள்ளார். அந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்தவுடன், புதிய கூட்டணிக்கு பயன்படுத்தப்படும் சின்னம் குறித்து உடன்பாடு எட்டப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

கரைச்சி பிரதேசசபைக்கு புதிய செயலாளர்

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்குகளில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக முடியாது; தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விளையாட்டு: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

Pagetamil

இராமநாதன் அரங்காற்றுகை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

யாழில் இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கடற்றொழிலாளர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!