26.5 C
Jaffna
February 26, 2024
இலங்கை

தமிழ் அரசு கட்சிக்குள் உயர் பதவிகோரும் கோடீஸ்வரன், வர்த்தகர்

புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்காக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய, பொதுக்குழு கூட்டங்கள் நாளை (27) திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

இதை தொடர்ந்து, கட்சியின் பதவிகளை பெற்றுக்கொள்ள தீவிர போட்டி, காய்நகர்த்தல்கள் கட்சிக்குள் நடந்து வருகிறது.

செயலாளர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி சிறிநேசனை நியமிக்க சிறிதரன் தரப்பு தீர்மானித்திருக்க, தலைவர் தெரிவில் சுமந்திரன் தரப்பை ஆதரித்த திருகோணமலை குகதாசன், முன்னாள் நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரும் அந்த பதவிக்கு ஆசைப்படுகிறார்கள்.

அவர்கள் போட்டியிட முன்வருவார்களா அல்லது பின்வாங்குவார்களா என்பது நாளை தெரிய வரும்.

இதேபோல, கட்சியின் பொருளாளர்களில் ஒருவராக கோடீஸ்வரனை பிரிந்துரைக்க கட்சி தலைமை தீர்மானித்திருந்தது. எனினும், அந்த பதவி தனக்கு வேண்டாம், துணைத்தலைவர் பதவி தேவையென கோடீஸ்வரன் கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல, கனடாவிலிருந்து வந்துள்ள வர்த்தகர் அகிலன் என்பவர் தனக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சி தலைமையை நச்சரித்து வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் மரதன்

Pagetamil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- சமத்துவ கட்சி தலைவர் சந்திரகுமார் சந்திப்பு

Pagetamil

மார்ச் மாதம் முதல் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினராகும் இலங்கையர்!

Pagetamil

‘நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை’: எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Pagetamil

கொள்கலனில் மறைந்து வெளிநாடு செல்ல முயன்ற 2 தமிழர்களும் நாடு கடத்தப்பட்டனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!