25.3 C
Jaffna
February 21, 2024
இலங்கை

ஒற்றை மின்விளக்கில் வந்த உழவு இயந்திரம்… புதுக்குடியிருப்பு இளைஞன் பரிதாப பலி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில், சுதந்திரபுரம் பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுதந்திரபுரம், வாகீசன் வீதியில் நெல் வெட்டும் இயந்திரத்தை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டா வாகனமும் மோதி விபத்திற்குள்ளாகின.

இந்த விபத்தில் பட்டா வாகனத்தை செலுத்தி வந்த வள்ளிபுனத்தை சேர்ந்த க.நவீன் (28) என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.

நெல் வெட்டும் இயந்திரத்தை ஏற்றி சென்ற உழவு இயந்திரம், போதிய பாதுகாப்பில்லாமல் பயணித்தது தெரிய வந்தது. உழவு இயந்திரத்தின் அளவை விட நெல் வெட்டும் இயந்திரத்தின் பாகங்கள் பெரிதாக இருந்தது. உழவு இயந்திரத்தின் முன்பக்க மின்குமிழ் ஒன்று செயலிழந்திருந்துள்ளது. இதனால் எதிரே வருபவர்களுக்கு உழவு இயந்திரத்தின் பின்னால் ஏற்றப்பட்ட நெல் வெட்டும் இயந்திரத்தின் அளவு தெரிய வாய்ப்பில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

உழவு இயந்திர சாரதி புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

கரைச்சி பிரதேசசபைக்கு புதிய செயலாளர்

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்குகளில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக முடியாது; தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விளையாட்டு: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

Pagetamil

இராமநாதன் அரங்காற்றுகை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

யாழில் இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கடற்றொழிலாளர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!