வாகரை பொலிஸ் பிரிவில் நேற்று (23) செவ்வாய் கிழமை நள்ளிரவு வலம்புரி சங்குடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
வாகரை திருமலை வீதியில் சென்ற வாகனமொன்றினை கதிரவெளி விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சோதனைக்கு உள்ளக்கியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வாகனத்தில் பயணித்த வெலிக்கந்தை பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணம் செய்த வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வாகரை சுற்றுலா நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
-க.ருத்திரன்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1