27.5 C
Jaffna
February 21, 2024
இலங்கை

மைத்திரியின் மகள் வீட்டில் கொள்ளை!

பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுரவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் சுமார் ரூ. 3 மில்லியன் பெறுமதியான நகை, பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வர்த்தகரான சத்துரிகாவின் கணவர், இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (21) பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது குவைத் விஜயத்தின் போது அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒட்டகத்தின் தங்க முலாம் பூசப்பட்ட சிலையை திருடர்கள் திருடியுள்ளனர்.

ஒட்டகத்தின் கண்களில் வைரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் வருகையின் போது பரிசாக வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட 8 சிங்கப்பூர் நாணயங்கள், ஸ்மார்ட் கைக்கடிகாரம், உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலைப் பை மற்றும் ரூ. 150,000 திருடப்பட்டிருந்தது.

சனிக்கிழமை (20) நண்பகல் முதல் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 6:00 மணி வரை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அலமாரியில் இருந்த பொருட்களையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரணைமடுகுளத்தையும் வயல் நிலங்களையும் சட்டவிரோத மணல் அகழ்வோரிடமிருந்து காப்பாற்றுங்கள் – பிரதேச மக்கள் அவசர கோரிக்கை

Pagetamil

யாழில் துயரம்: நாய் குறுக்காக ஓடியதால் யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி!

Pagetamil

யாழில் பூட்டிய வீட்டுக்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவியும், 17 வயது மாணவனும்!

Pagetamil

லொறி மோதி உயிரிழந்த பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர்!

Pagetamil

முன்னர் குறிப்பிட்டதை விட அதிகமாக மின் கட்டணம் குறையுமாம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!