25.3 C
Jaffna
February 21, 2024
இந்தியா

‘ராமர் மன்னிப்பார்…’: மோடி

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலில், இன்று குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை விழா, நண்பகல் 12 மணி முதல் நடந்து வருகிறது. இந்த நிகழ்வுக்காக, பொதுத்துறை வங்கிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு அரை நாள் விடுமுறை அளித்திருக்கிறது. பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களும் இதைப் பின்பற்றி பொது விடுமுறை அறிவித்துள்ளன.

பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றுவரும், இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்தும், அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், திரைத்துறை பிரபலங்கள், பெரும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அயோத்தியில் குவிந்திருக்கின்றனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு இந்தியப் பிரதமர் மோடி தீபாராதனை காண்பித்து, பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து, மக்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “பல நூற்றாண்டுகளின் காத்திருப்புக்குப் பிறகு, நம் ராமர் மீண்டும் அயோத்திக்கு வந்துவிட்டார். எங்கள் குழந்தை ராமர் சாதாரண கூடாரத்தில் தங்க மாட்டார். அவர் இந்த தெய்வீக கோயிலில் தங்குவார். ஜனவரி 22, 2024 என்பது ஒரு தேதி மட்டுமல்ல, ஒரு புதிய சகாப்தத்தின் வருகையைக் குறிக்கிறது. இன்று கிராமங்கள்தோறும் கீர்த்தனையும், சங்கீர்த்தனமும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் இருக்கும் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு, பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் இன்று மற்றொரு தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இன்று மாலை, வீடுகள் தோறும் ராமஜோதி விளக்கேற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நமது முயற்சி, தியாகம், தவத்தில் ஏதோ குறை இருந்ததால்தான், பல நூற்றாண்டுகளாக இந்தக் கோயில் பணியைச் செய்ய முடியாமல் போயிருக்கிறது. அதனால் இன்று ராமரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு ராமர் நம்மை மன்னிப்பார் என்றும் நம்புகிறேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் ராமரின் பக்தர்கள் முழுமையாக ராமரால் உள்வாங்கப்பட்டுள்ளனர் என எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் பக்தர்கள் இதை ஆழ்ந்து உணர்கிறார்கள்… இந்த தருணம் தெய்வீகமானது. புனிதமானது. ராமர் கோயில் அமைப்பதற்கான சட்டப் போராட்டம் பல ஆண்டுகளாக நீடித்தது. அதற்கு சரியான நீதி வழங்கிய இந்திய நீதித்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கோயில் திறப்பதற்கு முன்னால், ராமருடன் தொடர்புடைய சரயு முதல் தனுஷ்கோடி வரை பல்வேறு இடங்களுக்கு பயணித்தேன். அதில், சாகரிலிருந்து சரயு வரை ராமரின் பெயரின் அதே உணர்வு எங்கும் தெரிகிறது… அமைதி, பொறுமை, பரஸ்பர நல்லிணக்கம், இந்தியச் சமுதாயத்தின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடையாளமாக இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய ஆன்மாவின் ஒவ்வொரு துகள்களுடனும் ராமர் இணைக்கப்பட்டிருக்கிறார். ராமர் இந்தியர்களின் இதயங்களில் வசிக்கிறார். இன்று அயோத்தியில் ராமர் சிலை மட்டும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை… ராமரின் வடிவத்தில் வெளிப்படும் இந்திய கலாசாரத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை, மனித விழுமியங்களின் உயர்ந்த லட்சியங்களின் உருவகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

இந்தக் கோயில் வெறும் கடவுளின் கோயில் மட்டுமல்ல. இந்தியாவின் பார்வை, அதன் தத்துவம், இந்தியாவின் அடையாளம் இந்தக் கோயில். இது ராமர் வடிவில் உள்ள தேசிய உணர்வின் கோயில். ராமர் கோயிலின் கட்டுமானம் இந்திய சமுதாயத்தின் முதிர்ச்சியின் பிரதிபலிப்பு. இது வெற்றிக்கான சந்தர்ப்பம் மட்டுமல்ல, பணிவுக்கான வாய்ப்பும்கூட… இந்த ராமர் கோயில் பிரமாண்டமான இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், இந்தியாவின் எழுச்சிக்கும் சாட்சியாக மாறும்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி – தேர்தல் அதிகாரி மீது வழக்குப் பதிய உத்தரவு

Pagetamil

பெற்றோர் பெண் பார்க்காததன் எதிரொலி: முச்சக்கர வண்டியில் சுயவிபரங்களை பகிர்ந்து மணமகள் தேடும் இளைஞன்!

Pagetamil

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Pagetamil

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்போம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் எச்சரிக்கை

Pagetamil

முதலிரவில் அளவுக்கு அதிகமாக வயக்கரா மாத்திரை உட்கொண்டு விட்டு பாய்ந்த மணமகன்: மணமகள் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!