25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் விளக்கமறியலில்!

வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட வவுனியா மாவட்ட நீதவான், போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணுக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியாவிற்கு நேற்று (05) காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு நேற்று போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்ட போராட்டகாரர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர். இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காறர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டது.

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் சார்ல்ஸ்நையஸ் ஆகிய பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவ் கைது நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட இருவருக்கும் பொலிஸாருக்கிடையே தர்க்கமும் ஏற்பட்டிருந்தது. பெண் பொலிஸாரினால் இருவரும் பேருந்தில் ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை , பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை , அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னினைப்படுத்த போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கி வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்தை மிரட்டும் எலிக்காய்ச்சல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Pagetamil

ஃபோர்ட் சிட்டி ஆணைக்குழு நியமனம்

east pagetamil

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்களப்பில் சோகம்

east pagetamil

Leave a Comment