27.3 C
Jaffna
February 24, 2024
இலங்கை

முன்னாள் டிஐஜி நாலக சில்வா விடுதலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொலிஸ் அத்தியட்சர் ஆகியோரை கொலை செய்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பிணையில் உள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (6) விடுதலை செய்தார்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்த உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், நாலக சில்வாவிற்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் முன்வைக்கப்படாததால் அவரை விடுதலை செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நாலக சில்வா, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது திறந்த நீதிமன்றில் ஆஜரானார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதாள உலக தலைவர் மாகந்துரே மதுஷ் பொலிஸ் காவலில் இருந்த போது மோதலில் உயிரிழந்துள்ளார்.

ஊழல் ஒழிப்புப் படையின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமாரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வழக்கை நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 மாத குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு சென்ற மட்டக்களப்பு இளம் ஜோடி; ஸ்கெட்ச் போட்டு மலையகத்தில் தங்கினரா?

Pagetamil

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த 18 வயது யுவதி!

Pagetamil

யாழில் ஆசிரியர் அடித்து காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil

40 வீத இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!

Pagetamil

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த கொடியேற்றம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!