27.3 C
Jaffna
February 24, 2024
இலங்கை

கல்கிசை நீதவானை சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

போதைப்பொருள் மன்னன் கம்பளை விதானகே சமந்த குமார என்ற ‘வெலே சுதா’வின் இளைய சகோதரரான சுனிமல் பெரேராவுக்கு எதிராக 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி சாட்சியமளிக்க கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கல்கிசை நீதவான் கோசல சேனாதீரவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

வீதித்தடுப்பில் பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தரை கொல்ல முயன்ற வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வேளையில் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற சந்தேக நபரின் அடையாள அணிவகுப்பின் பிரதிகளை அழைப்பாணையுடன் கல்கிசை நீதவானுக்கு அனுப்புமாறும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான வழக்கு ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான வழக்கு ஆவணத்தை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என கல்கிசை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

.இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 2, 2024 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் சட்டத்தரணி சுரங்க பண்டார ஆஜரானதுடன், சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி நிமேஷா டி அல்விஸ் ஆஜரானார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 மாத குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு சென்ற மட்டக்களப்பு இளம் ஜோடி; ஸ்கெட்ச் போட்டு மலையகத்தில் தங்கினரா?

Pagetamil

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த 18 வயது யுவதி!

Pagetamil

யாழில் ஆசிரியர் அடித்து காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil

40 வீத இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!

Pagetamil

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த கொடியேற்றம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!