27.3 C
Jaffna
February 24, 2024
உலகம்

‘மாலத்தீவிலிருந்து படைகளை வெளியேற்ற இந்தியா இணக்கம்’: ஜனாதிபதி முய்ஸு

மனிதாபிமான நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்காக தமது நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள சுமார் 75 இந்திய இராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதற்கான புதிய மாலத்தீவு அரசாங்கத்தின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டதாக மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

டுபாயில் நடைபெறும் COP28 காலநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, இந்த இணக்கம் ஏற்பட்டதாக கூறினார்.

அண்மையில் மாலத்தீவு அதிகாரத்தை சீன சார்பு முகமது முய்ஸு கைப்பற்றினார். அவர் தேர்தலில் “இந்தியா அவுட்” பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தார். தாம் தேர்தலில் வென்றால் மாலத்தீவுகளில் நிலைகொண்டுள்ள இந்திய படைகளை வெளியேற்றுவேன் என்றார்.

“மாலத்தீவில் இருந்து இந்திய துருப்புக்கள் திரும்பப் பெறுவது தொடர்பான அவர்களின் முடிவை மதிக்கும் என்று இந்திய அரசாங்கம் மாலத்தீவு மக்களுக்கு உறுதியளித்துள்ளது” என்று மாலைதீவு ஜனாதிபதியின் அலுவலகம் ஒரு ட்வீட்டில் எழுதியது.

“நாங்கள் நடத்திய கலந்துரையாடலில், இந்திய வீரர்களை அகற்ற இந்திய அரசு ஒப்புக்கொண்டது” என்று முய்சு செய்தியாளர்களிடம் கூறினார்.

“வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க உயர்மட்டக் குழுவை அமைக்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்“ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது!

Pagetamil

நிலவில் வெற்றிகரமான தரையிறங்கிய தனியார் நிறுவன விண்கலம்

Pagetamil

இஸ்ரேலின் இனஅழிப்புக்கு அமெரிக்கா பச்சை விளக்கா?: போர்நிறுத்த தீர்மானத்தை வீட்டோ செய்தது!

Pagetamil

அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சிக்காக 200 ஏக்கரில் 30 ஆயிரம் குரங்குகளுக்கு மினி நகரம்

Pagetamil

பிரபல நீலப்பட நடிகை தற்கொலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!