27.3 C
Jaffna
February 24, 2024
உலகம்

பிரான்ஸ் கத்திக்குத்தில் சுற்றுலாப் பயணி பலி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில்  ஜெர்மனிய சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுப்பயணத்துக்காக வந்திருந்த தம்பதி தாக்குதலுக்கு ஆளானதாக அமைச்சு கூறியது. அந்தத் தாக்குதலில் பிலிப்பீன்ஸில் பிறந்தவரான ஜெர்மனியச் சுற்றுலாப்பயணி உயிரிழந்தார்.

நேற்று சனிக்கிழமை சுமார் 19.00 GMT மணியளவில், குவாய் டி கிரெனெல்லில் ஒரு சுற்றுலா ஜோடியை அந்த நபர் கத்தியால் தாக்கியபோது, ஒரு ஜெர்மன் நாட்டவர் படுகாயமடைந்தார்.

பின்னர் அந்த நபரை போலீசார் துரத்திச் சென்று கைது செய்வதற்கு முன்பு மேலும் இருவரை சுத்தியலால் தாக்கினர்.

சந்தேக நபர் தாக்குதல் நடத்தியபோது “அல்லாஹு அக்பர்” (கடவுள் மிகப் பெரியவர்) என்று கூச்சலிட்டார்.

“ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தில் பல முஸ்லிம்கள் இறந்து கொண்டிருப்பதால் தான் வருத்தமடைந்ததாகவும், காசா நிலைமை குறித்தும் வருத்தமடைந்ததாகவும் காவல்துறையிடம் கூறினார்” என்று உள்துறை அமைச்சர் தர்மானின் கூறினார்.

தாக்குதலை நடத்தியவர் ஏற்கெனவே மற்றொரு தாக்குதலுக்குத் திட்டமிட்ட குற்றத்துக்காக 2016இல் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். பிரெஞ்சு பாதுகாப்பு சேவைகளின் கண்காணிப்புப் பட்டியலில் இருந்ததுடன், அவர் மனநலக் கோளாறுகளுடன் இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் தர்மானின் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது!

Pagetamil

நிலவில் வெற்றிகரமான தரையிறங்கிய தனியார் நிறுவன விண்கலம்

Pagetamil

இஸ்ரேலின் இனஅழிப்புக்கு அமெரிக்கா பச்சை விளக்கா?: போர்நிறுத்த தீர்மானத்தை வீட்டோ செய்தது!

Pagetamil

அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சிக்காக 200 ஏக்கரில் 30 ஆயிரம் குரங்குகளுக்கு மினி நகரம்

Pagetamil

பிரபல நீலப்பட நடிகை தற்கொலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!