27.3 C
Jaffna
February 24, 2024
கிழக்கு

வடிகாலில் விழுந்து 4 வயது சிறுமி பலி

தம்பலகாமம். முள்ளிப்பொத்தானை 10 ஆம் யூனிட்டில் வீடொன்றுக்கு முன்பாக உள்ள வடிகாலில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரிஹால் அமல் ஹாஜர் என்ற நான்கு வயது முன்பள்ளிச் சிறுமியே உயிரிழந்துள்ளார். நேற்று (1) இந்த சம்பவம் நடந்தது.

தந்தை வீட்டின் முன்பாக வாகன பறறரி மாற்றிக் கொண்டிருந்த போது, சிறுமி அங்கிருந்துள்ளார். வேலை மும்முரத்தில் மகள் கூட இருந்ததை தந்தை கவனிக்க தவறியுள்ளார்.

இந்த சமயத்தில் வடிகாலின் அண்மையில் சிறுமி சென்றபோது, அவரது கால் செருப்பொன்று தவறி வடிகாலுக்குள் விழுந்துள்ளது. அதை எடுக்க முயன்றபோது, சிறுமி வடிகாலுக்குள் தவறி விழுந்துள்ளார்.

தவறி விழுந்த சிறுமி வாய்க்கால் வெள்ளத்தில் 500 மீற்றர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

சற்று நேரத்தின் பின்னர், பிள்ளையை குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். இந்த சமயத்தில், புல் வெட்ட சென்ற ஒருவர் சிறுமியின் சடலத்தை அவதானித்து தகவல் லழங்கினார்.

சடலமாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிம் ஒப்படைக்கப்பட்டு, இன்று ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை பொங்கல் நிகழ்வுக்கு பொலிசார் தடை!

Pagetamil

பெண்ணை பலியெடுத்த விபத்து!

Pagetamil

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: கைதான சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Pagetamil

மட்டக்களப்பில் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதம்!

Pagetamil

கைதான சந்தேகநபரின் தொலைபேசியை மலிவு விலையில் விற்ற பொலிஸ்காரர் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!