27.3 C
Jaffna
February 24, 2024
இந்தியா

2 மனைவி, 6 காதலிகள்: ஆடம்பர வாழ்க்கைக்கு திருடனாக மாறிய சமூக வலைத்தள பிரபலம்!

பணமோசடி உட்பட பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச சமூக வலைத்தள பிரபலம் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த அஜீத் மயூரா என்பவர் சமூக வலைத்தளத்தில் பிரபலம் ஆனவர். சமீபத்தில் பணமோசடி, இன்சூரன்ஸ் மோசடி, திருட்டு தொடர்பான வழக்குகளில் மயூரா கைது செய்யப்பட்டார்.

பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி தர்மேந்திரா என்பவரிடம் ரூ.3 லட்சத்தை மயூராவும் அவரின் ஆட்களும் வாங்கி ஏமாற்றி இருக்கின்றனர். இது குறித்து தர்மேந்திரா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மயூராவை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மீது 9 கிரிமினல் வழக்கு இருப்பது தெரிய வந்தது. ஆரம்பக்காலத்தில் மும்பையில் இருந்த மயூரா அங்கு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு 7 குழந்தைகள் இருக்கின்றன. மயூராவிற்கு வேலை பறிபோனபோது மும்பையில் போலி பிளாஸ்டர் ஆப் பாரீஸ் தயாரித்துள்ளார். அதுவும் சரியாக கைகொடுக்காததால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு வந்தார். ஊரிலும் வேலை இல்லாத காரணத்தால் குடும்பத்தை காப்பாற்ற முதல் முறையாக 2016இல் திருட்டில் ஈடுபட ஆரம்பித்தார்.

அதன் பிறகு போலி நிறுவனங்கள், கள்ள நோட்டு மாற்றுதல், திருட்டு என அனைத்து வகையான குற்றங்களிலும் ஈடுபட ஆரம்பித்தார். இதில் சுசிலா (30) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவது மற்றும் போலி நிதி நிறுவனம் நடத்துவது போன்ற வேலையில் ஈடுபட்டனர்.

இதில் கிடைத்த பணத்தில் இருவரும் ஆடம்பரமாக வாழ ஆரம்பித்தனர். இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதில் சுசிலாவிற்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. சுசிலா மற்றும் சங்கீதாவிற்கு தனித்தனியாக இரண்டு வீடுகள் வாங்கி கொடுத்துள்ள மயூரா இருவரையும் தனித்தனி வீட்டில் தங்க வைத்துள்ளார். இரண்டு மனைவிகளையும் ஆடம்பரமாக வாழ வைத்துள்ள மயூரா, மோசடி மற்றும் திருட்டு பணத்தை இரு மனைவிக்கும் சமமாக பிரித்து கொடுப்பதை வழக்கமாக கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அதேசமயம் மயூரா தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

அவரின் மொபைல் போனை ஆய்வு செய்த போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. மயூராவிற்கு மேலும் 6 காதலிகள் இருந்துள்ளனர். அவர்களை அழைத்துக்கொண்டு அடிக்கடி நீண்ட பயணம் செய்வதை மயூரா வழக்கமாக கொண்டிருந்தார். அடிக்கடி அப்பெண்களுடன் வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். சமூக வலைத்தளத்தில் மயூரா வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் பெண்களை கவரும் வகையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

லக்னோவில் உள்ள ஓட்டலில் அமர்ந்து தனது காதலியுடன் வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டுக்கொண்டிருந்த போது மயூராவை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் குடும்பத்திற்கு சாப்பாடு போட இது போன்ற காரியத்தில் ஈடுபட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். போலீஸார் மயூராவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

மயூரா எங்கெல்லாம் சொத்து வாங்கிப்போட்டு இருக்கிறார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அச்சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆண் குழந்தை பெற எப்படி உடலுறவு கொள்வது?: மருமகளுக்கு பாடமெடுத்த மாமிக்கு எதிராக வழக்கு!

Pagetamil

அழகி தற்கொலை: நெருங்கிப் பழகிய ஐபிஎல் வீரர் விசாரணையில்!

Pagetamil

திருமணம்: 2 மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட உடல்

Pagetamil

‘என்னை அரசியலுக்கு வரவைப்பது கஸ்டம்… அரசியலில் இருந்து அகற்றுவது அதைவிட கஸ்டம்’: கமல்!

Pagetamil

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி – தேர்தல் அதிகாரி மீது வழக்குப் பதிய உத்தரவு

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!