27.3 C
Jaffna
February 24, 2024
இலங்கை

விபத்தில் ஒருவர் பலி

காலி- கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதி தூங்கியமையினால் வாகனம் வீதியை விட்டு விலகி கொங்கிரீட் தூண்களில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மொரட்டுவையில் உள்ள கட்டிடமொன்றில் கொங்கிறீட் போட்டுவிட்டு பத்தேகம நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் பின்னால் பயணித்த ஒருவர், லொறி கவிழ்ந்ததில் கொங்கிரீட் இயந்திரத்தின் அடியில் விழுந்து பலத்த காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆர்.ஆரின் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், சுமந்திரன், டக்ளஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி!

Pagetamil

5 மாத குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு சென்ற மட்டக்களப்பு இளம் ஜோடி; ஸ்கெட்ச் போட்டு மலையகத்தில் தங்கினரா?

Pagetamil

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த 18 வயது யுவதி!

Pagetamil

யாழில் ஆசிரியர் அடித்து காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil

40 வீத இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!