27.3 C
Jaffna
February 24, 2024
இலங்கை

மழை அதிகரிக்கும்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

கிழக்கு மாகாணம், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (01) சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் இன்று (01) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் தென் மாகாணத்திலும் காலை வேளையில் சுமார் 74 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆர்.ஆரின் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், சுமந்திரன், டக்ளஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி!

Pagetamil

5 மாத குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு சென்ற மட்டக்களப்பு இளம் ஜோடி; ஸ்கெட்ச் போட்டு மலையகத்தில் தங்கினரா?

Pagetamil

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த 18 வயது யுவதி!

Pagetamil

யாழில் ஆசிரியர் அடித்து காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil

40 வீத இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!