27.3 C
Jaffna
February 24, 2024
இலங்கை

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் பயணித்த ஜீப் மத்திய அதிவேக வீதியிலிருந்து குருநாகல் யக்கஹாபிட்டிய பகுதியில் வெளியேறும் போது, ​​பற்றுச்சீட்டு வழங்கும் பகுதியின் தடுப்பு ஜீப் மீது விழுந்ததில் சேதம் ஏற்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (28) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மகிந்த ராஜபக்ச பயணித்த சொகுசு ஜீப்பின் முன்பக்க கண்ணாடியும் வாகனமும் சேதமடைந்துள்ளன. மகிந்த ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் அனுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​அவர்கள் குருநாகல் யக்கஹாபிட்டிய வெளியேறு வழியாகச் சென்றனர். அந்த வாகனத்துக்கு முன்னதாக பொலிஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிய ஜீப் சென்றது.

பொலிஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் ஆகியவை வெளியேறும் வாயிலைக் கடந்தவுடன், பற்றுச்சீட்டு வழங்குமிடத்தில் இருந்த ஊழியர் அங்கிருந்த தடையை இறக்கியபோது மகிந்த ராஜபக்ச பயணித்த வாகனத்தின் முன்பகுதியில் மோதி உடைந்தது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்ள டிக்கெட் பற்றுச்சீட்டு வழங்குமிடத்தில் பணியாற்றும் சில ஊழியர்களின் கவனக்குறைவால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு தடவைகள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த போது இந்த தடுப்பு வாகனத்தின் கண்ணாடி மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 மாத குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு சென்ற மட்டக்களப்பு இளம் ஜோடி; ஸ்கெட்ச் போட்டு மலையகத்தில் தங்கினரா?

Pagetamil

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த 18 வயது யுவதி!

Pagetamil

யாழில் ஆசிரியர் அடித்து காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil

40 வீத இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!

Pagetamil

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த கொடியேற்றம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!