27.3 C
Jaffna
February 24, 2024
இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே முதலாம் கட்டத்தில் 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (28) வரை 39 மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் முல்லைதீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் விஸ்தீரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசேட ஸ்கான் பரிசோதனையின் முடிவில், கொக்கிளாய்- முல்லைத்தீவு பிரதான வீதிப்பக்கமாக ஏற்கெனவே அகழ்வுக்காக தோண்டப்பட்ட இடத்திலிருந்து மேலதிகமாக 1.7 மீற்றர் வரை செல்வதாகவும் அகலமாக 3 மீற்றர் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அகழப்பட்ட குழியில் இருக்கின்ற உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறுத்தப்பட்ட இருக்கின்றது.

மேலதிகமாக இணங்காணப்பட்டுள்ள உடற்பாகங்களை மீட்பதற்காக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதகாலம் இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பான மேலதிக விடயங்களை கலந்தாலோசித்து முடிவெட்டுவதற்காக இம்மாதம் 14 ஆம் திக்கு குறித்த வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 மாத குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு சென்ற மட்டக்களப்பு இளம் ஜோடி; ஸ்கெட்ச் போட்டு மலையகத்தில் தங்கினரா?

Pagetamil

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த 18 வயது யுவதி!

Pagetamil

யாழில் ஆசிரியர் அடித்து காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil

40 வீத இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!

Pagetamil

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த கொடியேற்றம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!