27.3 C
Jaffna
February 24, 2024
உலகம்

அழகாயிருந்ததால் பயமாயிருந்தது: 15 வயது மூத்த மணப்பெண், குடும்பத்தை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை; திருமண நிகழ்வில் மணமகன் வெறிச்செயல்!

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான நகோன் ரட்சசிமாவில் நடந்த திருமண விழாவில், மணப்பெண்ணையும், குடும்பத்தினரையும் சுட்டுக்கொன்ற மணமகன், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தாழ்வுச்சிக்கலால் இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

வாங் நாம் கியாவோ காவல் நிலையத்திற்கு துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் கிடைத்ததும், சம்பவம் நடந்த வீட்டிற்கு பொலிசார் விரைந்தனர். அங்கு வந்தபோது, உடைந்த கண்ணாடிகள், போட்டில்கள் மற்றும் நாற்காலிகள் மற்றும் மேஜைகளை சேதப்படுத்திய நிலையில் ஒரு குழப்பமான நிகழ்வை பொலிசார் அவதானித்தனர்.

ஜதுரோங் “ஜாக்” சூக்சூக் என்ற 29 வயது மணமகன், 38 வயது மணமகள் காஞ்சனா “பு” ஜான்டூக், 37 வயது மணமகளின் சகோதரி கோர்னிடா மேனேட்டர் மற்றும் 60 வயது மணமகளின் தாயார் கிங்தாங் கிளஜோர்ஹோர் உட்பட நான்கு உயிரற்ற உடல்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.

Kanchana Pachantuek. The couple had lived together for three years before deciding to get married, according to Thai media

50 வயதான தோங் நோன்குண்டோட் மற்றும் 28 வயதுடைய பாம்ரோங் சதாராட் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் வழியிலேயே தாங் இறந்தார்.

ஜாக் மற்றும் பு தங்கள் வீட்டில் காலையில் ஒரு திருமண விழாவை நடத்தியதாகவும், கொண்டாட்டம் மாலை வரை தொடர்ந்ததாகவும் சாட்சிகள் போலிசாரிடம் தெரிவித்தனர்.

சில விருந்தினர்கள் மற்றும் மணமகளின் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக மது அருந்திய போது, மணமக்களுக்கிடையில் பொறாமை காரணமாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மணமகள் அழகாகவும் நட்பாகவும் இருந்ததால் ஒவ்வொரு விருந்தினருடனும் பேசி அவர்களுடன் குடித்து மகிழ்ந்ததாக சாட்சிகள் தெரிவித்தனர்.

மணமகன் 28 வயதானவர். ஒரு கால் ஊனமுற்றவர். அவர் தாய்லாந்துக்காக பரா ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

சில விருந்தினர்கள் மணமகளை விரும்புவதாக மணமகன் நினைத்தார். அவர், தான் ஊனமுற்றவர், அதனால் தன்னை விட பல வயது மூத்த மணமகளை திருமணம் செய்ய வேண்டியேற்பட்டதாக தாழ்வுச்சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

மணமகன் குடிபோதையில் இருந்தார். மணமகள் ஒவ்வொரு விருந்தினரையும் வரவேற்றார். அவர் சகஜமாக பேசிப்பழகியது மணமகனுக்கு பிடிக்கவில்லை. கோபமடைந்தார்.

திடீரென வீட்டிற்கு வெளிப்பக்கமாக ஓடிச்சென்று, தனது காருக்குள்ளிருந்த துப்பாக்கியை எடுத்து வந்து மணமகளையும், அவரது தாய், சகோதரியையும் சுட்டுக்கொன்றார். அத்துடன், விருந்தினர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இறுதியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமான 9எம்எம் பிஸ்டல் ஜாக்கின் உடல் அருகே கண்டெடுக்கப்பட்டது.

ஜாக் சர்வதேச நீச்சல் மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்ற முன்னாள் பாராலிம்பிக் தடகள வீரர்.. அவர் துப்பாக்கி சேகரிப்பாளராகவும் இருந்தார், ஆனால் அவரது துப்பாக்கி உரிமை சட்டப்பூர்வமானதா இல்லையா என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது!

Pagetamil

நிலவில் வெற்றிகரமான தரையிறங்கிய தனியார் நிறுவன விண்கலம்

Pagetamil

இஸ்ரேலின் இனஅழிப்புக்கு அமெரிக்கா பச்சை விளக்கா?: போர்நிறுத்த தீர்மானத்தை வீட்டோ செய்தது!

Pagetamil

அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சிக்காக 200 ஏக்கரில் 30 ஆயிரம் குரங்குகளுக்கு மினி நகரம்

Pagetamil

பிரபல நீலப்பட நடிகை தற்கொலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!