25.7 C
Jaffna
February 23, 2024
விளையாட்டு

IPL 2024 அப்டேட்: 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

எதிர்வரும் ஐபிஎல் 2024 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஏலத்துக்கு முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் குறித்த முழு விவரத்தைப் பார்ப்போம்.

10 அணிகளும் டிசம்பர் 19ஆம் திகதி ஏலத்திற்கு முன்னதாக அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் குறித்த பட்டியலை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். அதன்படி அனைத்து அணிகளும் அந்த விவரங்களை வெளியிட்டுள்ளன. சில அணிகள் டிரேடிங் முறையில் தங்கள் அணியில் உள்ள வீரரை கொடுத்து வேறு அணியில் உள்ள வீரரை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

டிசம்பர் மாத ஏலத்தில் ஒவ்வொரு அணியும் மொத்தமாக ரூ.100 கோடி வரையில் ஏலம் எடுக்கலாம். இது அணியில் தற்போது இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான தொகையையும் உள்ளடக்கியது. கடந்த முறை இது ரூ.95 கோடியாக இருந்தது. 2024ஆம் ஆண்டுக்கான சீசன் முடிந்ததும் மெகா ஏலம் நடைபெற உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் தக்கவைத்த வீரர்கள்: ஷிகர் தவான் (கப்டன்), மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா தைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம் கரன், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் , ஹர்பிரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங்.

விடுவித்துள்ள வீரர்கள்: மோஹித் ரதீ, ராஜ் பாவா, ஷாருக் கான், பனுக ராஜபக்ச, பால்தேஜ் சிங்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் தக்கவைத்துள்ள வீரர்கள்: சஞ்சு சாம்சன் (கப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஹெட்மெயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல், ரியான் பராக், ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சஹல்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், ஓபேட் மெக்காய், முருகன் அஸ்வின், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப்.

டெல்லி கபிடல்ஸ் தக்கவைத்துள்ள வீரர்கள்: ரிஷப் பந்த், பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஆஸ்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி இங்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், இஷாந்த் சர்மா, யாஷ் துல், முகேஷ் குமார்.

விடுவித்துள்ள வீரர்கள்: ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்கவைத்துள்ள வீரர்கள்: ஸ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, அன்குல் ராய், ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

விடுவித்துள்ள வீரர்கள்: ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட், ஷர்துல் தாக்கூர், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், உமேஷ் யாதவ், டிம் சவுதி, ஜான்சன் சார்லஸ், பெர்குசன்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தக்கவைத்துள்ள வீரர்கள்: மார்க்ரம் (கப்டன்), அப்துல் சமாத், அபிஷேக் சர்மா, மார்க்கோ யான்சன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்வீர் சிங், கிளாசன், புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், நடராஜன், அன்மோல்ப்ரீத் சிங், மயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் பாரூக்கி.

விடுவித்துள்ள வீரர்கள்: ஹாரி ப்ரூக், சாமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகில் ஹுசைன், அடில் ரஷித்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தக்கவைத்துள்ள வீரர்கள்: கே.எல்.ராகுல் (கப்டன்), டி கொக், நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, கைல் மேயர்ஸ், ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா, படிக்கல் (டிரேடட்), ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், க்ருணல் பாண்ட்யா, யுத்வீர் சிங், பிரேராக் மன்கட், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, மார்க் வுட், மயங்க் யாதவ், மோஷின் கான்.

விடுவித்துள்ள வீரர்கள்: உனத்கட், மனன் வோஹ்ரா, ஸ்வப்னில் சிங், டேனியல் சாம்ஸ், கரண் சர்மா, அர்பித் குலேரியா, சுர்யான்ஷ் ஷெட்ஜ், கருண் நாயர்.

குஜராத் டைட்டன்ஸ் தக்கவைத்துள்ள வீரர்கள்: ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ஷுப்மான் கில், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாட்டியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர்,ரஷித் கான், ஜோசுவா லிட்டில், மோஹித் ஷர்மா.

விடுவித்துள்ள வீரர்கள்: யஷ் தயாள், கே.எஸ். பரத், ஷிவம் மாவி, படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசுன் ஷனகா.

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு தக்கவைத்துள்ள வீரர்கள்: டுப்ளெசிஸ் (கப்டன்), கிளென் மக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கரண் சர்மா, மனோஜ் பந்தேஜ், வைஷாக் விஜய்குமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஹிமான்ஸ் டோப்லி, சர்மா, ராஜன் குமார்.

விடுவித்துள்ள வீரர்கள்: வனிந்து ஹசரங்க, ஹர்சல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்.

மும்பை இந்தியன்ஸ் தக்கவைத்துள்ள வீரர்கள்: ரோஹித் சர்மா (கப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

விடுவித்துள்ள வீரர்கள்: முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துள்ள வீரர்கள்: தோனி (கப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷாக்யா ரஹானே, மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்‌ஷன.

விடுவித்துள்ள வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சேனாபதி, ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகாலா.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘நீங்கள் வேறு வேலையை தேடுவது நல்லது’: நடுவரை விமர்சித்த ஹசரங்க!

Pagetamil

முதலாவது ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!

Pagetamil

‘கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு’ – குறிப்பால் உணர்த்திய சர்பராஸ் கானின் தந்தை

Pagetamil

266 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது ஆப்கானிஸ்தான்

Pagetamil

‘திருமணமான 3 மாதத்தில் பிரச்சினை’: தந்தையின் குற்றச்சாட்டும், ரவீந்திர ஜடேஜா பதிலும்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!