25.7 C
Jaffna
February 23, 2024
முக்கியச் செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதுவரை 35 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குதுடுவாய் பாரிய புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி நேற்று (25) 6ஆம் நாளாக இடம்பெற்றது.

பாரிய புதைகுழி தொடர்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் மூலம் நான்கு முழு மனித உடல்களின் எலும்பு பாகங்கள் மீட்கப்பட்டடுள்ளன.

நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது இரும்பு குண்டுகள் என சந்தேகிக்கப்படும் சில பகுதிகளும் மீட்கப்பட்டன.

பாரிய புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 17 முழுமையான மனித உடல்கள் தொடர்பான எலும்புகள் மீட்கப்பட்டன. மூன்றாம் கட்டத்தின் ஆறாவது நாளில் மேலும் 4 மனித உடல்கள் தொடர்பான எலும்புக் கூண்டுகள் மீட்கப்பட்டன.

மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் இதுவரை 18 மனித உடல்களின் எலும்புக்கூடுகளை கண்டெடுக்க முடிந்தது.

இதுவரை 35 முழு மனித உடல்களின் எலும்புக் கூடுகள் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

வெடிமருந்துகள் போன்ற 8 பாகங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் 6 இலக்கத் தகடுகள், நீர் சுத்திகரிப்பு சாதனம், சயனைட் குப்பி, பெண்களின் மேல் உள்ளாடைகளும் கண்டெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொக்குதூடுவாய் குழுவின் சடலம் தொடர்பில் நேற்று முன்தினம்  (24) ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நிலத்தடி உலோகங்கள், எலும்புகள் மற்றும் ஆயுதங்களை கண்டறிவதற்காக விசாரணைகளை முன்னெடுத்த விசேட குழுவினர் புதைகுழியை சூழவுள்ள பகுதியில் ஸ்கேன் மேற்கொண்டனர். 3 டி பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமைக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான வீதிக்கு கீழும் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது. பரிசோதனை முடிவில் அது உறுதியானால், பிரதான வீதியும் தோண்டப்படும். எவ்வாறாயினும் வரும் வியாழக்கிழமைக்குள் புதைகுழி தோண்டும் பணிகள் முழுமையாக முடிவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை காலமும் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் முல்லைத்தீவு நீதவான் உத்தரவின் பேரில் விசாரணைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள விசேட அறையில் வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் தற்போதைய நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையின் கீழ், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரிகள், தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் இந்தப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி எச்சங்கள் 1994- 1996 காலத்துக்குரியவை: தமிழ்பக்கத்தின் தகவல் நீதிமன்றத்தில் உறுதியானது!

Pagetamil

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்: பௌத்த பிக்குவும் பற்கேற்பு!

Pagetamil

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை: உயர்நீதிமன்றம்!

Pagetamil

அரசின் தனியார் மயமாக்கலால் மக்களின் வாழ்க்கை பெரும் அபாயத்தில்… புத்தரின் போதனையின் படி அரச தலைவரின் கடமை என்ன?: ரணிலுக்கு காட்டமான கடிதம் அனுப்பிய மகாநாயக்கர்கள்!

Pagetamil

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!