27.3 C
Jaffna
February 24, 2024
கிழக்கு

6 மாத குழந்தை பாம்பு தீண்டி பலி

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒளிக்குளம்  பிரதேசத்தில் நேற்று (24) அதிகாலை ஆறு மாதக் குழந்தையொன்று பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளது.

பாத்திமாபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டின் தரையில் உறங்கிக் கொண்டிருந்த சிசுவை பாம்பு தீண்டியுள்ளமை மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அதிகாலை 3.30 மணியளவில் தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பாம்பு தீண்டியுள்ளதுடன், காலை 7 மணியளவில் குழந்தை மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் குழந்தை உயிரிழந்திருந்தமை தெரியவந்ததையடுத்து, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இக்னேஷ் அபிலாஷ் என்ற 6 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை பொங்கல் நிகழ்வுக்கு பொலிசார் தடை!

Pagetamil

பெண்ணை பலியெடுத்த விபத்து!

Pagetamil

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: கைதான சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Pagetamil

மட்டக்களப்பில் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதம்!

Pagetamil

கைதான சந்தேகநபரின் தொலைபேசியை மலிவு விலையில் விற்ற பொலிஸ்காரர் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!