சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டித் தொடரை இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு மாற்றியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் இணையதளமான CricBuzz இன் அறிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளதாக CricBuzz தெரிவித்துள்ளது.
ஐசிசி தற்போது அகமதாபாத்தில் கூடி வருவதாகவும், விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட்டை இடைநிறுத்துவததென நவம்பர் 10 ஆம் திகதி எடுத்த முடிவை அங்கீகரிக்க நிர்வாகசபை முடிவு செய்துள்ளதாக அறிக்கை மேலும் கூறியது.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) அகமதாபாத்தில் உள்ள ஐடிசி நர்மதாவில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் ஐசிசியின் வெளியேற்றப்பட்ட தலைவர் ஷம்மி சில்வா கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இலங்கை கிரிக்கெட்டின் ஊழல் அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ள இந்தியரான ஜெய் ஸாவின் செல்வாக்கில் இலங்கையை இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக வலுவான விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.