27.6 C
Jaffna
November 29, 2023
இலங்கை

யாழில் 24,379 மாவீரர்களின் பெயர்களுடன் நினைவாலயம்

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது.

இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்பொழுது பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாரான சிவபாதம் இந்திரவதி ஏற்றிவைத்து மலரஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து தமிழ் தேசிய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் மலரஞ்சலி செலுத்தினர்.

தொடர்ச்சியாக சிறுவர் சிறுமியர்களால் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை திரைநீக்கம் செய்யபட்டு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1982 கார்த்திகை 27 முதல் 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் கிடைக்கபெற முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கி நினைவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகள், சிறுவர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி, தொடரும் இரும்பு திருட்டு

Pagetamil

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டிக்கிறது யாழ் ஊடக அமையம்!

Pagetamil

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!