கந்தபொல, கடையொன்றுக்கு அருகாமையில் இருந்த வயோதிபர் ஒருவரை எருமை மாடு தாக்கியதில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹைஃபாரெஸ்டில் வசிக்கும் 84 வயதுடையவரே படுகாயமடைந்தார்.
காயமடைந்த நபரை உடனடியாக பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
வனப்பகுதியில் இருந்து காளை ஹைஃபாரஸ்ட் நகருக்குள் புகுந்து சுற்றி வந்ததுடன், தப்பியோடிய முதியவரை தாக்கி, கீழே விழுந்த பின்னர் குத்த ஆரம்பித்துள்ளதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1