வட்டுக்கோட்டையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு வட்டுக்கோட்டை பொலிஸாரிடமிருந்து மாற்றப்பட்டுள்ளதாக சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.
திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும், சட்டவிரோதமான முறையில் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை தொடர்ந்து, இரண்டு இளைஞர்களும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்தார்.
இந்த வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, பொலிசாரால் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன், வழக்கு வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து மாற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி க.சுகாஸ் முன்னிலையாகியிருந்தார்.