குற்றமிழைத்த பொலிஸார் உடனடியாக கைது செய்யப்பட்டு உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ். வட்டுக்கோட்டை பொலீஸாரின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலையே முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்
வட்டுக்கோட்டைப் பொலீசாரின் சட்ட விரோத சித்திரவதைகளால் அப்பாவி இளைஞன் கொல்லப்பட்டமை மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது.
இக் கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றமிழைத்த பொலீசார் உடனடியாகக் கைது செய்யப்படுவதோடு விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.
மேலும் பொலீசாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்ந்து வருகின்றதாகவும் இத்தகைய அடாவடிகள் அராஜகங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமெனவும் குறிப்பிட்டுள்ளார்.