25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

இலங்கை அமைச்சருக்கு பிரித்தானிய தீவில் சொத்து?

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பிரித்தானிய விர்ஜின் தீவுகளில் அமைந்துள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையாளராகவும் இயக்குனராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய பண்டோரா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தல் மூலம் இது தெரியவந்துள்ளது.

சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர் கூட்டமைப்பு 100 நாடுகளைச் சேர்ந்த 280 பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் சமீபத்திய வெளிப்பாடு தொடர்பான தகவல்களைச் சேகரித்தது.

ஜூலை 2017 முதல் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் உள்ள பான்ஹாம் வென்ச்சர்ஸ் லிமிடெட் மற்றும் டெப்ரோம்டன் பிராப்பர்டீஸின் உரிமையாளர் மற்றும் இயக்குநராக டிரன் பிரசன்னா கிறிஸ்டோபர் அலஸ் இருந்து வருவதாக சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளிப்படுத்துகிறது.

உலகப் பணக்காரர்கள் வரியில்லாப் பணம் மற்றும் வெளியிடப்படாத கருப்புப் பணத்தை முதலீடு செய்வதற்கான முதலீட்டுத் தலமாக விர்ஜின் தீவுகள் அறியப்படுகின்றன.

மேலும், இலங்கையானது நாட்டிற்கு வெளியே மூலதனத்தை கடுமையாக கட்டுப்படுத்தும் நாடாக இருப்பதால், இலங்கையர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் பொது பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து அவற்றிலிருந்து நன்மைகளை பெற்றுக்கொண்டமை சர்ச்சைக்குரிய விடயமாகும்.

இந்நிலையில், பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளின் புகைப்படங்களை ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் ரங்கஸ்ரீ லால் செய்தி ஒன்றின் மூலம் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் டிரன் அலஸுக்குச் சொந்தமான இந்த வீடுகள் 31, Baronsmede, Ealing london kw;Wk; Gunnersbury Avenue, W5  4 LP ஆகிய முகவரிகளில் அமைந்துள்ளதாக ஊடகவியலாளர் குறிப்பிடுகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!