வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கொன்றில் சித்தன்கேணி பகுதயினை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து பொலிசார் தாக்கிய நிலையில் நேற்றைய தினம் சந்தேகநபர் இறந்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு கருதிவிசேட அதிரடிப் படையினர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிசார் , மானிப்பாய், சுன்னாகம் பொலிசார் விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வட்டுகோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின யாழ் மாவட்ட இணைப்பாளர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலயைத்திற்கு வருகை தந்து சுமார் ஒரு மணத்தியாயலத்திற்கு மேலதிகமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.