Site icon Pagetamil

கோப் குழுவின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் (கோப் குழு) தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை கையளிக்கப்படவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டு காரணமாக அவரை கோப் குழுவின்  தலைவராக வைத்து கிரிக்கெட் நிறுவனம் பற்றி பேசுவது ஆக்கபூர்வமான விடயமல்ல என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ரஞ்சித் பண்டார தலைமையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு உடன்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கேட்ட போது, ​​கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

மேலும், தனது மகனை கோப் குழுவின் 4ட்டங்களுக்கு அழைப்பத குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர் தலைமையில் பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோப் குழுவின் கூட்டங்களை காலவரையறையின்றி நிறுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தீர்மானித்துள்ளார்.

Exit mobile version