வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று (18) நிகழ்ந்த விபத்து சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், முதியவர் ஒருவரும் உயிரிழந்தனர்.
சொந்த இடமான அனுராதபுரத்திலிருந்து, பணியிடமான அக்கராயன் பொலிஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவரும் மோதி விபத்துக்குள்ளானார்கள்.
விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய பொலிஸ் உத்தியோகத்தரே விபத்தில் சிக்கினார்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த திசாநாயக்க என்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தரே உயிரிழந்தார். திருமணமாகி ஒருவருடம் கடந்த நிலையில் தற்பொழுது அவருக்கு 1மாதம் நிரப்பிய கைக்குழந்தை உள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த வவுனியா கந்தசாமி கோவில் பகுதியில் வசிக்கும் சண்முகம் நாதன் (72) வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.