உழவு இயந்திரம் ஓடிக்கொண்டிருந்தபோது பெட்டி கழன்று விபத்திதுக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் கண்டி பிரதான வீதியின் மல்லியப்பு பிரதேசத்தில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தின் பெட்டி பகுதி கழன்று விழுந்ததில் ஏற்பட்ட இந்த விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த 08 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் சிகிச்சைக்காக டிக்ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிட நிர்மாணப் பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள் குழுவுடன் ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தின் பின் பெட்டி கழன்று பிரதான வீதியின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக அந்த வீதியில் சுமார் 30 நிமிடம் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து தடைப்பட்டது.