ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (17) அதிகாலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதத்தின் மீது பாரிய பாறாங்கல் ஒன்று விழுந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (17) அதிகாலை இரவு அஞ்சல் புகையிரதம் ஹப்புத்தளை நிலையத்தை கடந்து தியத்தலாவ நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது மலை உச்சியில் இருந்த பெரிய பாறாங்கல் ஒன்று 156/13 மைல் தூணுக்கு அருகில் இரவு தபால் புகையிரதத்தின் மீது திடீரென விழுந்துள்ளது. ரயிலின் முன் எஞ்சின் ரயில் தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ரயில் பாதை மற்றும் இன்ஜினுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1