28.8 C
Jaffna
December 7, 2023
கிழக்கு

போலி விசாவில் கனடா செல்ல முயன்ற மட்டக்களப்பு வாசி சிக்கினார்

போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதானவர்.

இன்று காலை 08.15க்கு டுபாய் செல்லவிருந்த EK-653 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவரது அனுமதிக்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் இருந்த கனேடிய விசா குறித்து சந்தேகம் கொண்ட விமானநிலைய உத்தியோகத்தர்கள், அவரை குடிவரவு மற்றும் எல்லை அமலாக்க பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் இந்த விசா போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவரை கைது செய்த குடிவரவு மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பிரிவினர் நடத்திய விசாரணையில், இந்த விசாவை தயார் செய்து தர தரகர் ஒருவரிடம் 30 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், கனடா சென்ற பின்னர் மேலும் 30 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குர்ஆன் மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுவனின் சடலம்: மதரஸாவின் நிர்வாகி கைது!

Pagetamil

சிறுவனை ஏன் தாக்கினேன்?; பெண் மேற்பார்வையாளர் அதிர்ச்சி தகவல்: 14 நாள் விளக்கமறியல்!

Pagetamil

கல்முனை நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் மரணம்: பெண் மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்!

Pagetamil

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் கிழக்கு மாகாண நிலவரம்!

Pagetamil

மட்டக்களப்பு 17 வயது சிறுவன் பராமரிப்பு நிலையத்தில் அடித்துக் கொலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!