நடிகை மிருணால் தாக்கூர், பாலிவுட் பாடகர் பாட்ஷாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஷில்பா ஷெட்டியின் தீபாவளி விருந்தில் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை தொடர்ந்து, இந்த செய்தி பரவிவருகிறது.
இந்த தீபாவளி விருந்தில் மிருணால் தாக்கூர் மற்றும் பாட்ஷா இருவரும் கைகோர்த்தபடி காணப்பட்டனர். மேலும், இருவரும் ஷில்பா ஷெட்டியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த பார்ட்டியில் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷில்பா ஷெட்டியின் தீபாவளி விருந்துக்குப் பிறகு, பாட்ஷாவும் மிருணாலும் கைகோர்த்து வந்தனர். இருவரும் ஒரே காரில் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக செய்திக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. மிருணால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பாட்ஷாவுடன் பார்ட்டியில் இருந்த புகைப்படங்களை வெளியிட்டார். காதல் பறவைகள் தங்கள் டேட்டிங் வதந்திகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.
பாட்ஷா ஒரு நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பாடகர், ராப்பர். இவரின் இயற்பெயர் ஆதித்ய பிரதீக் சிங் சிசோடியா. அவரது முதல் பாடல் டிஜே வேல் பாபு. இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் ஐடியூன்ஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. பஞ்சாபில் இந்து ராஜ்புத் குடும்பத்தில் பிறந்த பாட்ஷா 2014 ஆம் ஆண்டு முதல் இந்தி படங்களில் பாடல்கள் பாடி வருகிறார்.