வீடுகளில் கட்டப்பட்டிருந்த மாடுகளை திருடியதாக கூறப்படும் கடற்படை சிப்பாய் உட்பட மூவரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளது.
சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், திருடப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கால்நடைகளையும், திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் லொறியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்படை முகாமில் பணிபுரியும் பட்டுலுஓயாவை வசிப்பிடமாகக் கொண்டவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1