படுக்கையறை காட்சியில் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய வாணி போஜன், தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். தமிழ் படங்கள் மாத்திரமின்றி, தெலுங்கிலும் நடித்துள்ளார். தெலுங்கில் உக்கே தானா தித்தா படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் படத்தின் ஏமாற்றத்தால் வாணிக்கு தெலுங்கில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பில் ஒரு பேட்டியில் அவர் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகைகள் என்ன சொன்னாலும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பணம் அல்லது வாய்ப்புகள் என்ற பெயரில் அடிபணிய முயற்சிகள் நடக்கின்றன. வாணி போஜனுக்கும் அப்படியொரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது.
அவர் கூறியதாவது: நான் நடிக்க ஒப்புக்கொண்ட ஒரு படத்தில் தேவையில்லாமல் ஒரு காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. காட்சிக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை. படுக்கையறையில் அது ஒரு காதல் காட்சி. இந்தக் காட்சி படத்தில் இருப்பதாக எனக்கு முன்பே சொல்லப்படவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றபோது, படுக்கையறைக் காட்சியில் நடிக்கச் சொன்னார்கள். நடிக்க மாட்டேன்னு சொன்னாலும் வற்புறுத்தினார்கள். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
அந்த காட்சியில் நடிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. பணத்துக்காக நான் இறங்கி நடிக்க மாட்டேன். எனக்கு உங்கள் பணம் தேவையில்லையென கூறிவிட்டு வந்து விட்டேன் என்றார்.
நெட்டிசன்கள் வாணி போஜனின் பணியை பாராட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் பிஸியாக உள்ளார்.